கொட்டி தீர்த்த மழை - பாளையங்கோட்டையில் 30 செ.மீ பதிவு
சாலைகளில் தேங்கிய மழை நீர்
பாளையங்கோட்டையில் சுமார் 152 வருடங்களுக்கு பின் ஒரே நாளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கன மழை பெய்து வருகின்றது.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் பாளையங்கோட்டையில் 1871ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Next Story