விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளி கொலை
குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளி கொலை செய்யபட்டு கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக மீட்பு குடியாத்தம் போலீசார் விசாரணை. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆலாம் பட்டறை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 30) இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் கூலி வேலை செய்து வந்தார் .
இந்நிலையில் வீட்டிலிருந்து சென்ற செல்வராஜ் இரவு ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் குடியாத்தம்- ஒலக்காசி சாலையில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை குடியாத்தம் குறித்து குடியாத்தம் தாலூகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.