மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில் அணை. நீரோடைகள் மற்றும் குளங்கள் உள்ள பகுதி அதிகம் காணப்படுவதால் ராஜபாளையம் சேத்தூர் முகவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தப் பகுதியில் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வருகின்றனர். இந்த நிலையில் சாஸ்தா கோவில் அணை மற்றும் சாஸ்தா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அடிவாரப் பகுதி வரை யானைகள் வருகை அதிகரித்து காணபடுவதாகவும் இதனால் நீரோடை பகுதிக்கு வருபவர்கள் , அணைப்பகுதி அருகே விவசாயம் செய்யும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் வனப்பகுதியை கலக்க வேண்டும் என வனத்துறை விடுத்துள்ளது. மேலும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story