பன்றி குட்டியை கடித்து குதறிய சிறுத்தை - பள்ளிக்கு விடுமுறை

பன்றி குட்டியை கடித்து குதறிய சிறுத்தை - பள்ளிக்கு விடுமுறை

மீட்கப்பட்ட பன்றி குட்டியின் சடலம் 

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூரைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வனத்துறை ,தீயணைப்பு துறை ,காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும்.பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடியற்காலையில் தனியார் பள்ளிக்கு அருகில் சிறுத்தை கடித்து குதறிய பன்றி குட்டியின் உடல் மீட்கப்பட்ட்டது.

Tags

Next Story