ஒரு லட்சம் வடைகளால் ஆன மாலையில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தி-2024, 1,00,008 வடை மாலையுடன் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம் .அனுமன் ஜெயந்தி விழாவான இன்று நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாற்றப்பட்டது. இந்த வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்தனர்.