நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் விவகாரம் இரட்டை கொலை வழக்காக மாற்றம்

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் விவகாரம் இரட்டை கொலை வழக்காக மாற்றம்

கொலை வழக்கு 

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் விவகாரம் இரட்டை கொலை வழக்காக மாற்றப்படுள்ளது.

நாமக்கல்லில் கடந்த 01.05.2024 அன்று ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிச் செல்லப்பட்ட சிக்கன் ரைஸ்சில் பூச்சி மருந்து கலந்து பகவதி என்பவன் தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு கொடுத்துள்ளான். தன்னை ஒரு சம்பவம் தொடர்பாக தாத்தா மற்றும் தாய் ஆகியோர் கண்டித்ததால் சிக்கன் ரைஸ்ல் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளான்.

இதனால் அவர்கள் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, 02.05.2024 காலை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அவரது தாத்தா சண்முகநாதன் (72) 2.5.2024-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவனின் தாய் நதியா என்பவர் இன்று (3.5.2024- மாலை) சிகிச்சை பலனின்றி நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக நாமக்கல் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் பகவதியை இன்று (3.5.2024 காலை) கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தாத்தா சண்முகநாதன் மற்றும் தாய் நதியா ஆகிய 2 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story