மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் கலெக்டர் சொல்கிறார் ஆல் தி பெஸ்ட்

மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் கலெக்டர் சொல்கிறார் ஆல் தி பெஸ்ட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் வாழ்த்து

நாமக்கல் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (01.03.2024) மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 17,411 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளார்கள். அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாமக்கல் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 85 தேர்வு மையங்களில் 8,479 மாணவர்களும் 8,932 மாணவியர்களும் என மொத்தம் 17,411 மாணவ/ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை ஐந்து தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 286 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் 112 பேரில் 94 மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வுக்கு 85 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 3 கூடுதல் துறை அலுவலர்கள், 163 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,200 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு மையங்களை பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மற்றும் மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைத்து தேர்வு மையங்களை பார்வையிட உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags

Next Story