நாமக்கல் கொமதேக வேட்பாளர் இரவோடு இரவாக மாற்றம் - பின்னணி என்ன ?

வீ.எஸ்.மாதேஸ்வரன் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் இரவோடு இரவாக திடீர் மாற்றம் செய்யப்பட்டு சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் வீ.எஸ்.மாதேஸ்வரன் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். அண்மையில் சூரியமூர்த்தி மீது சாதி ரீதியான விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story