தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வேண்டாம்: நினைவிட பொறுப்பாளர்

தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வேண்டாம்: நினைவிட  பொறுப்பாளர்
பசும்பொன் தேவர் நினைவகத்தில் மலர் வளையம் வைக்க வேண்டாம்
தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வேண்டாம் என நினைவிட பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொனில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது செய்தி விழாவும் 61-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வரும் பொழுது மலை வளையம் வைப்பது வழக்கமாக இருந்தது.

தேசியமும் தெய்வமும் இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத் தேவரை அப்பகுதி மக்கள் கடவுளாக பார்த்து வருகின்றனர் இது பொருட்டு அவருக்கு பால்குடம், அக்னி சட்டி, அழகுவேல், முளைப்பாரி, முடி காணிக்கை, பொங்கல் வைத்தல் போன்ற கோவிலில் வழிபடும் முறைப்படியே வழிபட்டு வருகின்றனர்.

எனவே இந்த இடத்தில் மலர் வளையம் வைக்க வேண்டாம் என்று நீண்ட காலமாக இங்கு வரும் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் இந்த கோரிக்கையை ஏற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story