நாமக்கல் தொகுதியில் பாஜக சார்பில் கே. பி ராமலிங்கம் போட்டி

நாமக்கல் தொகுதியில் பாஜக சார்பில் கே. பி ராமலிங்கம் போட்டி

கே. பி ராமலிங்கம்

நாமக்கல் தொகுதியில் பாஜக சார்பில் கே. பி ராமலிங்கம் போட்டியிட உள்ளார்.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பட்டியலில், நாமக்கல் தொகுதியில் டாக்டர் கே.பி. ராமலிங்கம், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன். வி. பாலகணபதி, வட சென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வதாமன், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சியில் கே. வசந்தராஜன்,

கரூரில் வி.வி. செந்தில்நாதன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் எஸ்ஜிஎ ரமேஷ், தஞ்சையில் எம். முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் பி. ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் பாஜக வேட்பாளர் பற்றி முழு விவரம் பெயர் : Dr.K.P.ராமலிங்கம் B VSC தந்தை பெயர் : KC. பழனியப்ப கவுண்டர் தாயார் பெயர் : அன்னபூரணி மனைவி பெயர்: சரஸ்வதி (65) மகள் : சிந்தாமணி (32) (மருத்துவர்) மகன் : அதியமான் (30) (பொறியாளர்) முகவரி : உழவர் இல்லம், 175 கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் 2, ராசிபுரம் - 637408. நாமக்கல் மாவட்டம். சொந்த ஊர்: காளிப்பட்டி பிறந்த தேதி: 02-06-1954 படிப்பு : கால்நடை மருத்துவர் தொழில்: விவசாயம், எழுத்தாளர், பேச்சாளர், கால்நடை மருத்துவர் மதம், சாதி: இந்து - நாட்டுக் கவுண்டர்

அரசியல் மற்றும் பொது வாழ்வு அனுபவம்: 1)1972 முதல் 1980-ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் மாணவர் பிரிவு தலைவர் 2) 1990 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளர் 3) 1972 முதல் 1973-ஆம் ஆண்டு வரை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் 4)மெட்ராஸ் சிட்டி இன்டர்காலேஜியேட் மாணவர் தலைவர் 5) 1975 முதல் 1977-ஆம் ஆண்டு வரை உலக பல்கலைக்கழக மாணவர் சேவை அமைப்பு இந்திய தேசிய செயலாளர் 6) 1980 முதல் 1984 மற்றும் 1984 முதல் 1987-ஆம் ஆண்டு வரை ராசிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் 7)11வது லோக்சபா நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்செங்கோடு தொகுதி) 8)1999 முதல் 2009-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை வாரிய உறுப்பினர் 9)2001 முதல் 2005-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அனைத்து,

முன்னாள் தலைவர்கள் சங்கத்தின் தலைவர் 10) தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் 11)2010 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர். 12) 2015-ஆம் ஆண்டு முதல் இயற்கை நீர் வளங்கள் உற்பத்தி இயக்க தலைவர் 13) 2020- ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில துணை தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர், கட்சியின் மையக் குழு உறுப்பினர் நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளராக டாக்டர் K.P. இராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story