ரூ.1.68 கோடியில் மீன் பண்ணை திறப்பு

ரூ.1.68 கோடியில் மீன் பண்ணை திறப்பு
X

மீன் பண்ணை


குன்றத்துார் அடுத்த மலையம்பாக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் உள்ளது. 400 சதுர மீட்டராக இருந்த இந்நிலையத்தை 1,260 சதுர அடியாக விரிவாக்கும் பணி நடந்தது. அதன்படி, 1.68 கோடி ரூபாயில் மூன்று மீன் வளர்க்கும் தொட்டி, புனரமைக்கப்பட்ட ஆறு நாற்றங்கால் தொட்டி, வண்ண மீன் வளர்ப்பு தொட்டி உள்ளிட்டவை கட்டப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட மீன் உற்பத்தி நிலையத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், நேற்று திறந்தார். அதிகாரிகள் கூறுகையில், 'இந்நிலையம் மூலம், 4.40 லட்சமாக இருக்கும் மீன் விரலிகள் உற்பத்தி, 12 லட்சமாக அதிகரித்து, உள்ளூர் மற்றும் வெளியூர் மாநில மீன் உற்பத்தியாளார்களுக்கு வினியோகம் செய்யலாம்' என்றனர்"

Tags

Next Story