குமரி கடற்கரை பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆட்சியர் எச்சரிக்கை

குமரி கடற்கரை பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆட்சியர் எச்சரிக்கை
பைல் படம்
குமரி மாவட்ட கடற்கரைகளில் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தென்தமிழக கடலோரப் பகுதியில் இன்றும் 7-ம்தேதி) கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், - மே 7ஆம் தேதி இரவு 11:30 மணி வரை கடல் அலைகள் சீற்றததுடன் காணப்படும். 0.5 முதல் 1.4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழ வாய்ப்பு உள்ளது. எனவே கடற்கரை பகுதியில் செல்லுபவர்கள் கடலோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், - குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதாக தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதுடன் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனக் கூறியுள்ளார்.

Tags

Next Story