ஆரஞ்சு அலர்ட்; 5 நாட்களுக்கு கனமழை கொட்டும் என எச்சரிக்கை!

ஆரஞ்சு அலர்ட்; 5 நாட்களுக்கு கனமழை கொட்டும் என எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று 15.05.2024 முதல் 17.05.2024 வரை 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் 18-ம் தேதி மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் மற்றும் 19-ம் தேதி கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் மேலும் மருதூர் அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதியிலான கலியாவூர் முதல் புன்னக்காயில் வரை ஆற்றங்கரையோரம் மதிக்கும் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ,மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story