தொடர் மழையால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

தொடர் மழையால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

பெருஞ்சாணி அணை

மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 57.7 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்களில் இருந்து கோடை மழை பெய்ய தொடங்கியது. பின் னர் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. தற்போது வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை நாள் முழுவதும் பெய் தது. இவ்வாறாக அக்னி நட்சத்திரத்தின் பாதிப்பே தெரியாத அளவுக்கு 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.நேற்று மலையோர பகுதிகளான மாம்பழத்துறையாறு, பெருஞ்சாணி, புத்தன்அணை, சுருளோடு ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து குறையவில்லை. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்து 57.7 அடியாக உள்ளது.

Tags

Next Story