கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் பிக்கப் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

6 பேர் பலத்த காயத்துடனும் 15 நபர்களுக்கு சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள விளாராம் மலைப்பகுதியில் மிளகு பறிப்பதற்காக 23 பேருடன் சென்ற மகேந்திர பிக்கப் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலத்த காயத்துடனும் 15 நபர்களுக்கு சிறிய காயத்துடன்,108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சேந்தமங்கலம் மற்றும் தம்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story