திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்

பக்தர்கள் கிரிவலம் 

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story