விருத்தாசலத்தில் இன்று மின்தடை

விருத்தாசலத்தில்  இன்று மின்தடை

மின்தடை (பைல் படம்)

சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் விருத்தாசலம் துணைமின் நிலையத்தின் கார்மாங்குடி பீடர் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்று 15 ஆம் தேதி சனிக்கிழமை சாலை விரிவாக்கப் பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விருத்தாசலம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் வழங்கப்படும் கார்மாங்குடி பீடர் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட ஏனாதிமேடு, கார்குடல் ரெட்டபாதை, அக்ரகார தெரு, நடுத்தெரு, வடக்கு தெரு, புதுசொட்டவனம், பழைய சொட்டவனம், சிவன்கோ வில் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story