வடகாடு பகுதியில் கொள்ளை முயற்சி: 4பேர் கைது

வடகாடு பகுதியில் கொள்ளை முயற்சி: 4பேர் கைது

கைதானவர்கள்


முத்துபேட்டை அருகே வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற 4பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை வடகாடு பகுதியில் வசித்து வரும் வைரக்கண்ணு என்பவருடைய மகன் சஞ்சய்காந்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் வைரக்கண்ணு தனது மருமகள் ஜெயலட்சுமி உடன் வசித்து வருகிறார்.

இதனை நோட்டமிட்ட நான்கு நபர்கள் வைரக்கண்ணுவின் வீட்டிற்குள் கொள்ளை அடிக்க முயற்சி செய்தபோது தகவல் அறிந்த முத்துப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இச்ச சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பிரவீன்குமார் ,கார்த்திக் ராஜா ,ராஜேஷ், சிவனேஷ் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story