சம்பா பட்ட நெல் நடவு பணி துவக்கம்

சம்பா பட்ட நெல் நடவு பணி துவக்கம்

சம்பா பட்ட நெல் நடவு பணியில் தொழிலாளர்கள்


காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றிய விவசாயிகள், நவரை, சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, ஒரு மாதமாக சம்பா பட்ட சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனம்பாக்கம், நீர்குன்றம், அமராவதிபட்டணம், படூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கிணற்று பாசனத்தை கொண்டு உழவுப் பணிகளை முடித்து, தற்போது நெல் நடவு பணிகளை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து ஆனம்பாக்கம் கிராம விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு சம்பா பட்டத்திற்கு பருவ மழையின் அளவை பொருத்து சாகுபடி செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இதுவரை பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால், கிணற்று பாசனம் வாயிலாக நெல் சாகுபடி செய்ய தீர்மானித்து நடவு பணிகளை துவக்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்."

Tags

Next Story