திருச்சி அழைத்து செல்லபட்ட சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
கோவை:பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை குறித்து அவதூறாக விமர்சனம் செய்த வழக்க்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது.திருச்சியில் பெண் அதிகாரி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய்பட்ட நிலையில் அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யூ டியூபர் சவுக்கு சங்கர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி மாநகர சைபர் க்ரைம் வழக்கில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கோவை மத்திய சிறையில் இருந்து ஆய்வாளர் சரவணன் தலைமையில் 11 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியுடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.உதவி ஆய்வாளர்,ஜோதிலட்சுமி,சிறப்பு உதவி ஆய்வாளர் அருண் ஜென்மராகினி,பெண் காவலர்கள் ரம்யா,ஐஸ்வர்யா,விஜிதா,தாவீது ஸ்டெபீ, கிருத்திகா மேரி,ராஜராஜேஸ்வரி, ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.