தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ஜெய் பீம் ஹாக்கி அகடாமி சார்பில் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கப்பட்டது. இன்று தொடங்கி வரும் 24 ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன.

நாக்கவுட் முறையில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி சென்னை உட்பட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 26 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஹாக்கி போட்டி விருதுநகர் மற்றும் கோவில்பட்டி அணி விளையாட்டு போட்டிகளை நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச் செல்வம் தொடங்கி வைத்தார்.

வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழர் கோப்பைகளும் பரிசு தொகைகளும் சான்றிதல்களும் வழங்கப்பட உள்ளன. ராஜபாளையம் ஜெய் பீம் ஹாக்கி அகடாமியினர் முதலாம் ஆண்டு தென்னிந்திய ஹாக்கி போட்டி ஏற்ப்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story