தென்னிந்தியாவின் முதலாவது பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு

தென்னிந்தியாவின் முதலாவது பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு
முன்னாள் எம் எல் ஏ வேலாயுதன்
தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ வான வேலாயுதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து முதன் முறையாக வெற்றி பெற்ற இவர், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. 1963-ம் ஆண்டு தனது 13-ம் வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்த அவர், 1982-ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ௧


989, 1991 சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த அவர், 3-வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் தென்னிந்தியாவில் முதல் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டசபைக்கு சென்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இவரை சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என பாராட்டி உள்ளார். அதன்பிறகு 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேலாயுதன், பா.ஜ.க மாநில துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2006-ம் ஆண்டுக்கு பின் அரசியலில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இயங்கினார்.

திருவனந்தபுரத்தில் மகன் வீட்டில் வசித்து வந்த வேலாயுதன், ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வந்திருந்த நிலையில் தான் வேலாயுதன் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு கருப்புக்கோடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story