கனரக வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க வந்தவர்கள் மற்றும் புதிய ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கை மூலம் சைகை (சிக்னல்) செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், நெடுஞ்சாலையில் நெடுங்கோடு, மஞ்சள் கோடு ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் சிறப்பு வகுப்பினை ஒலி மற்றும் ஒளி மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து சாலையில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனம் மற்றும் டிராக்ஸ் சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து கண் பார்வை திறன், ரத்த அழுத்தம், கண் வண்ணம் பிரிக்கும் திறன், விபத்தில்லா பயணம் செய்வதற்கு மனோதத்துவ முறையில் அறிவுரைகள் வழங்குவது போன்ற பரிசோதனைகளை நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பரிசோதனகள் செய்யப்பட்டது.

மேலும் கனரக வாகன ஓட்டுநர்கள் பல்வேறு நகரங்கள், மாநிலங்களுக்கு பயணம் செய்து, தூய்மையற்ற குடிநீரை பருகுவதால், நோய் உண்டாகும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பிளாக்ஸ் மற்றும் மருத்துவ உபகரணத் தொகுப்பும் பரிசாக ட்ராக்ஸ் சாலை பாதுகாப்பு துண்டு நிறுவனம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டார மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம், சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் தமிழ்நாடு திட்ட தலைவர் எம். வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனரக வாகனம் ஓட்டுனர்கள் இரவு பகல் காணாமல் பயணிப்பதால் கண் பாதிப்பு ஏற்படும் என்பதால் தொடர்ந்து கண் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டனர்.

Tags

Next Story