அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் அடக்கம்


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் வெடால் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அன்பரசன் (25). முத்துக்கிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கிவர அன்பரசன் அதே பகுதியில் உள்ள ஃபோட்டோ ஸ்டியோவில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் அன்பரசன் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அன்பரசன் மூளைச்சாவடைந்தார். அவர் இறந்ததையடுத்து அவரது பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக மருத்துவர்களிடம் தெரித்ததையடுத்து நேற்று காலை அன்பரசன் உடல் உறுப்புகளை மருத்துவ நிர்வாகம் பெற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அன்பரசன் உடல் நேற்று தனது சொந்த ஊரான வெடால் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் அளிப்பவர்களின் உடலுக்கு அரசு மரியதையுடன் உடல் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அன்பரசன் உடலுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் தாசில்தார் சரவணன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு, சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, விசிக ஒன்றிய செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story