வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் வெற்றி படுகொலை

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் வெற்றி படுகொலை

கருப்பசாமி

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த பேண்ட் வாத்திய கலைஞரான கருப்புசாமி என்பவரை முன் விரோதம் காரணமாக ஏற்கனவே கருப்பசாமியை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமியை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பேண்ட் வாத்திய செட் வைத்து திருமணங்களுக்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். கருப்பசாமியின் நண்பர்கள் ராஜா , நவீன், ஆரோன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது கருப்பசாமி மற்றும் அவரது நண்பர்கள் ஆன ராஜா, நவீன், ஆரோன் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டு ராஜா நவீன் ஆரோன் ஆகியோர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த கருப்பசாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வீடு திரும்பி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தென்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை வெட்டிய ராஜா, நவீன், ஆரோண் ஆகியோருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி அமுதாநகர் பகுதியில் வைத்து கருப்பசாமியை இந்த கும்பல் மிரட்டி சென்றுள்ளது இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வர அப்போது வந்து விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகல் கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் சுவர் ஏறி குதித்து ராஜா, ஆரோண் உள்ளிட்ட ஒரு கும்பல் கருப்பசாமியை கட்டிலில் வைத்து கழுத்து கை கால் உடல் என பல இடங்களில் அறிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நகர உதவி காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணிய சந்திரா நேரில் சென்று விசாரணை நடத்தினார் மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags

Next Story