நாமக்கல் : தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்

நாமக்கல் : தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்
தேர்தல் தொடர்பான புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு 
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் பொதுவான புகார்களுக்கு 1800-425-721 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், மாவட்டத் தேர்தல் அலுவலர் , ஆட்சியர் டாக்டர் ச. உமா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. இராஜேஷ் கண்ணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி புகைப்படங்களை அகற்றுதல், தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினரின் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைப்படி அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களை பார்வையிட்ட ஆட்சியர் அதனை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,

மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டவர் உள்ள வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தினமும் 8 மணி நேர சுழற்சி மணியில் இவர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் பொதுவான புகார்களுக்கு 1800-425-721 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தேர்தல் தொடர்பாகவும் இதர புகார்கள் தொடர்பாகவும் 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அதற்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ரூபாய் 50 ஆயிரம் வரை பொதுமக்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி எடுத்துச் செல்லலாம் என்றும், தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு முறைப்படி பணம் எடுத்துச் செல்வதில் குறித்து கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1660 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 68 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் இருந்தால் அதுகுறித்து முற்கால நடவடிக்கைகள் தகவல்களை தெரிவிப்பார்கள்.

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், புகைப்படங்கள் விளம்பர தட்டிகள், அரசுகளின் திட்டங்கள் குறித்த பதாகைகள் 24 மணி நேரத்தில் அகற்றப்படும் என்றும் பொது இடங்களில் உள்ள விளம்பர தட்டிகள் சுவர் விளம்பரங்கள் 72 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அழிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து அதனை அரசுத் துறையினரை அழிப்பார்கள் என்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர் ச. உமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டியின் போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. இராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ரெ. சுமன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story