ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம் மாவட்டம் ஏற்காடடில் தற்போது மழை மற்றும் பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று இரவில் இரவு கன மழையாக பெய்ய துவங்கிய மழை விடிந்து சாரல் மழையாக பெய்தது வருகிறது. மேலும் அடர்த்தியான பனி மூட்டம் காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளி கல்லூரிகள் திரக்கப்ட்ட நிலையில் இனறு காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். இவர்கள் பனி மூட்டத்தால் நின்றவாரு செல்பி எடுத்துக்கொண்டனர்.
பெறும்பாலான சுறறுலா பயணிகள் ஏற்காடு படகு இல்லத்தில் திரண்டனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய் காத்திருந்து பனி மூட்டத்தை ரசித்தபடி படகு சாவாரி செய்தனர். மேலும் ஏற்காடடில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களாக அண்ணா பூங்கா ஏரிபூங்கா லேடிசீட் பக்கோடா பாயின்ட் ரோஜா தோட்டம் சேர்வராயன் குகை கோயில் பொட்டானிக்கல் கார்டன் ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் பனி மூட்டத்தை ரசித்தனர். சாலையோர கடைகளில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மிளகாய் பஜ்ஜி மற்றும் டீ காப்பி அருந்தினர். கடுமையான குளிரையும் பொருட்ப்படுத்தாமல் சுறறுலா பயணிகள் ஏற்காடடில் குவிந்துள்ளனர்.