ராணிப்பேட்டை அருகே கொள்ளை அடித்த இருவர் கைது

ராணிப்பேட்டை அருகே கொள்ளை அடித்த இருவர் கைது

கைதானவர்கள்


ராணிப்பேட்டை அருகே பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40), பைனான்சியர். இவர் கடந்த 7-ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பைனான்ஸ் மூலமாக கொடுத்த ரூ.15 லட்சத்தை கலெக் ஷன் செய்துக்கொண்டு காரில் மீண்டும் ராணிப்பேட்டை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். காரை சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். இவரத காரில் பணம் கொண்டு செல்வதை அறிந்துக்கொண்ட 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

சிப்காட் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட லாலாப்பேட்டை அடுத்த கத்தாரிக்குப்பம் பகுதியில் வந்துக்கொண்டு இருந்தனர். பின்னால், வந்த மர்ம நபர்கள் இவரது காரை வழிமடக்கி உள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். மர்ம நபர்கள் சென்ற கார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றபோது, சாலை வளைவில் திரும்பியதும் நிலைத்தடுமாறி விவசாய நிலத்தில் சிக்கி பழுதானது.

மர்ம நபர்கள் காரை அங்கேயே விட்டுச் தப்பிச்சென்றனர். இதுகுறித்து சரவணன் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது கொள்ளை சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, துணைகாவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் தலைமையில், சிப்காட் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பார்த்தசாரதி மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், சஞ்சீவிராயன் மற்றும் தனிப்படை காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அது பெங்களூரைச் சேர்ந்த ஒருவருடையது கார் என்பதும், அவர் ஏற்கனவே தனது கார் காணாமல்போய் உள்ளதாக அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த எல்லப்பாவிடம்(28), சென்னவீரப்பா (22) ஆகிய இரு இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story