தர்மபுரி வந்த வந்தே பாரத் ரயில் !

தர்மபுரிக்கு வந்தே பாரத் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தர்மபுரி டிச.27: தர்மபுரிக்கு வந்தே பாரத் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

கோவை பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் வரும் 30 தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ஆம் தேதி ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் சோதனை ஓட்டம் இன்று கோவையில் தொடங்கியது.

கோவையில் காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை ஓட்டம் திருப்பூர். ஈரோடு. சேலம் வழியாக தருமபுரி வந்தது. தர்மபுரி ரயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 நிமிடங்கள் முன்பாகவே தர்மபுரி ரயில் நிலையம் வந்து இரண்டு நிமிடம் நின்று கடந்து சென்றது.. தர்மபுரிக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரயிலை வரவேற்க ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில் நிலையத்தில் குழுமி நின்று வரவேற்று ரயில் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர்.

கோவை பெங்களூரு வந்தே பாரத் துறையில் தர்மபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி என் வி செந்தில்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். வரும் 30ஆம் தேதி தொடங்கப்படும் வந்தே பாரத் ரயில் தர்மபுரியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து கோவை செல்வதற்கும் பெங்களூர் செல்வதற்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால் பயண நேரம் குறையும் என்பதால் ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது

Tags

Next Story