வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் திறப்பு

வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் திறப்பு

முனைவர் ஜி.வி. சம்பத்


வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதியதாக தீக்காயம் சிகிச்சை மையம் மற்றும் பக்கவாத சிகிச்சை மையம் விரைவில் துவக்கம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்க புதியதாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக இம்மருத்துமவனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:- வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு மூன்றாண்டு ஆகிறது.

இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல்; நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனையில் புதியதாக தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதாக இதற்கான சிறப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. மேலும், அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. பேட்டியின் போது மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் திலிப் மத்தாய், பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குரியன் தாமஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story