மூதாட்டியை கொன்ற இளைஞர் கைது

மூதாட்டியை கொன்ற இளைஞர் கைது

மூதாட்டியை கொலை செய்த வாலிபர்


சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே ஆண்டிச்சியூரணி பகுதியைச் சேர்ந்தவர் மேரி. 70 வயதான இவர் அதே பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த நபர்களை விசாரணைக்கு அழைத்ததில் ஒருவர் மட்டும் விசாரணைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் விசாரணையில் அவர் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மகன் வேல்முருகன் (22) என்பதும் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த மூக்குத்தி, வளையல்களை திருடியதாக கூறப்படும் நிலையில் காளையார்கோவில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story