சாம்சங் ஊழியர்கள் வேறொரு இடத்தில் போராட்டம் தொடக்கம்.

சாம்சங் ஊழியர்கள் வேறொரு இடத்தில் போராட்டம் தொடக்கம்.

சாம்சங் ஊழியர்கள் ஏற்கனவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் வேறொரு இடத்தில் போராட்டம் தொடக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு 8 மணி நேர வேலை, CITU தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 9 ஆம் தேதி இரவோடு இரவாக போராட்ட பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்க பாலு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் சாம்சங் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.



கடந்த 3 தினங்களாக தொடர் விடுமுறை என்பதால் போராட்டம் தீர்ப்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள சாம்சங் ஊழியருக்கு சொந்தமான இடத்தில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்தை தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.


Tags

Next Story