10-வது முடித்தவர்களா ..மத்திய அரசு நிறுவனத்தில் வேலை...மிஸ் பண்ணாதிங்க !!

10-வது முடித்தவர்களா ..மத்திய அரசு நிறுவனத்தில் வேலை...மிஸ் பண்ணாதிங்க !!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் துரைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பாதுகாப்பு உதவியாளர் (Safety Assistant) பணியிடங்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம் :

பாதுகாப்பு உதவியாளர் - 34 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு : 30

சம்பள விவரம் :

பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு முதல் ஆண்டு ரூ.23,300, இரண்டாம் ஆண்டிற்கு ரூ.24,000, மூன்றாம் ஆண்டிற்கு ரூ.24,800 மற்றும் ரூ.5830 முதல் ரூ.6200 வரை கூடுதல் நேர சம்பளம் வழங்கப்படும்.

பணிக்கான கல்வித்தகுதி :

பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பாதுகாப்பு/ தீ பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனம், தொழிற்சாலை, கட்டுமான கம்பெனி அல்லது இன்ஜினியரிங் கம்பெனி ஆகியவற்றில் ஒரு ஆண்டு பணிப்புரிந்த அனுபவம் தேவை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை :

திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். திறன் தேர்வு 70 மதிப்பெண்களுக்கும், உடல் பரிசோதனை 30 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

இதில் பொது மற்றும் EWS பிரிவு 50%, ஓபிசி பிரிவு 45%, எஸ்.சி, எஸ்.டி பிரிவு 40% என தேர்ச்சி விகிதம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://cochinshipyard.in/ என்ற இணைய முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி : 11.06.2024

உடல் பரிசோதனை மற்றும் திறன் தேர்வு நடைபெறும் நாள் - பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.200 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Tags

Next Story