மாவட்ட நீதிமன்றங்களில் 2,323 காலிப் பணியிடங்கள் !! மிஸ் பண்ணாதிங்க ....
நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2,323 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழக முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை சென்னை உயர்நீதிமன்ற ஆட்கள் சேர்ப்பு தீர்ப்பு பிரிவு நிரப்பி வருகிறது. உரிய அறிவிப்புகள் வெளியிட்டு எழுத்து தேர்வு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிய நிலையில் அலுவலக உதவியாளர், நகலர், பன்முக உதவியாளர், டிரைவர், காவலர் என 2323 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட வரை விவரமாக பார்க்கலாம் வாங்க....
பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர்: 638,
காவலர் /இரவுக்காவலர்: 459,
மசால்ஜி (பன்முக உதவியாளர்): 402,
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்: 242,
தூய்மை பணியாளர்: 202
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்: 100
டிரைவர்: 27 தூய்மை பணியாளர்: 202
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு, சம்பளம்:
வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2024 தேதிப்படி 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சமாக 71,900 வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்ப நாள்& கட்டணம்:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இது குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.. ஆன்லைன் மூலம் இன்று (28.04.2024) முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27.05.2024 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துவிட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/login கிளிக் செய்யவும். மாவட்ட வாரியாக பணியிடங்கள் பிரித்துகொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.