12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் அரசு வேலை! 3,712 காலி பணியிடங்கள் !!

12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் அரசு வேலை! 3,712 காலி பணியிடங்கள் !!

அரசு வேலை

12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் அரசு வேலை 3,712 காலி பணியிடங்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை:

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன? கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ'

கல்வித்தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 27 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02. 08.1997 முன்பு பிறந்தவர்களும் 01. 08. 2006 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் விவரம்:

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA) - ரூ.19,900 - 63,200 வரை

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO) ரூ. 25,500 - 81,100 மற்றும் Level-5 ரூ. 29,200 - 92,300

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ'- லெவல் 4- ரூ.. 25,500 - 81,100 சம்பளமாக கிடைக்கும்.

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 08.04.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024 ஆகும். இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை விவரம் :

கணினி வழியில் இரண்டு கட்டங்களாக (Tier-I), (Tier-II) தேர்வு நடைபெறும். அதன்பிறகு திறன் தேர்வு / டைப்பிங் டெஸ்ட் & சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்கhttps://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice of CHSLE 2024_05_04_24.pdf இங்கே கிளிக் செய்யவும்.

Tags

Next Story