நீங்க டிகிரி முடித்தவர்களா ? சாப்ட்வேர் என்ஜினியராக பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை மிஸ் பண்ணாதிங்க !!!!
ஐடி நிறுவனம்
பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு டிகிரி ,மாஸ்டர் டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் netapp இந்த நிறுவனம் unified data storage, integrated data services மற்றும் cloud operations உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
கல்வி தகுதி :
கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரிவில் டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் 0 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி இப்போது தான் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு Python கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சி++, REST API, cloud and Virutalization, ReactJS, உள்ளிட்டவை தெரிந்திருந்து வைத்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு போனஸாக அமையும். மேலும் VMWare, ESX, Linux KVM தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்பதும், தேர்வு செய்யப்படும் நபருக்கான மாதசம்பளம் பற்றிய விபரமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் சம்பளத்தை பொறுத்தவரை அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக NetAPP நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here https://careers.netapp.com/job/bengaluru/software-engineer/27600/64077230112