மாவட்ட நீதிமன்றங்களில் வேலை - 2329 காலியிடங்கள் !!!

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை - 2329 காலியிடங்கள் !!!

 நீதிமன்றங்களில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணியிடங்கள் விவரம்: நகல் பரிசோதகர் – 60,நகல் வாசிப்பாளர் – 11,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100,இளநிலை கட்டளை

நிறைவேற்றுனர் – 242, கட்டளை எழுத்தர் – 1,ஒளிப்பட நகல் எடுப்பவர் – 53,ஓட்டுநர் – 27,நகல் பிரிவு உதவியாளர் – 16,அலுவலக

உதவியாளர் – 638,தூய்மை பணியாளர் – 202,தோட்டப் பணியாளர் – 12,காவலர்/ இரவுக் காவலர் – 459,இரவுக் காவலர் – மசால்ஜி – 85,காவலர் – மசால்ஜி – 18,துப்புரவு பணியாளர் – மசால்ஜி – 1,வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் – 2,மசால்ஜி - 402

சம்பளம்:

1.நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு – ரூ. 19,500 – 71,900

2.இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு – ரூ. 19,000 – 69,900

3.கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்களுக்கு – ரூ. 16,600 – 60,800

4.நகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், இரவுக் காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர், வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் பணியிடங்களுக்கு – ரூ. 15,700 – 58,100

வயது: 01.07.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/முஸ்லிம் ஆகியோர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்்ந்த ஆதரவற்ற விதவைகள் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: Office Assistant.Copyist, Attender பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. டிரைவர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் எம்எம்வி லைசென்ஸ் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Examiner/Reader/Senior Bailiff/Junior Bailiff/ Process Writer/Xerox Operator பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு தமிழில் நன்றாக எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் பொதுப்பிரிவினர் ₹500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தமிழ் மொழி திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2024.

Tags

Next Story