பழநி தண்டாயுதபாணி கோயிலில் வேலைவாய்ப்பு - மொத்தம் 296 இடங்கள் !
வேலைவாய்ப்பு
பழநி தண்டாயுதபாணி கோயிலில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளித்துறை பிரிவில் 252 (துப்புரவு பணியாளர் 161, காவல் 46, இளநிலை உதவியாளர் 7, சீட்டு விற்பனையாளர் 13 உட்பட), தொழில்நுட்ப பணி (இன்ஜினியர், ஆப்பரேட்டர், டிரைவர் உட்பட) 30, உள்துறை 13 (அர்ச்சகர், நாதஸ்வரம், தவில் உட்பட), ஆசிரியர் 1 என மொத்தம் 296 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி / டிப்ளமோ/ஐ.டி.ஐ., / சில பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருத்தல்.
வயது: 18-45 (1.7.2024ன் படி)
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்.
கடைசி நாள்: 8.1.2025 மாலை 5:45 மணி.
விவரங்களுக்கு: palanimurugan.hrce.tn.gov.in