தபால் நிலைய வங்கியில் வேலை - 54 காலி பணியிடங்கள் !!

தபால் நிலைய வங்கியில் வேலை - 54 காலி பணியிடங்கள் !!

தபால் நிலைய வங்கியில் வேலை

தபால் நிலைய வங்கியில் (ஐ.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எக்சிகியூட்டிவ் (ஐ.டி., ) பிரிவில் அசோசியேட் கன்சல்டன்ட் 28, கன்சல்டன்ட் 21, சீனியர் கன்சல்டன்ட் 5 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., - பி.டெக்., (கம்ப்யூட்டர் ஐ.டி.,) அல்லது எம்.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., (கம்ப்யூட்டர்)/பி.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.2024 அடிப்படையில் அசோசியேட் கன்சல்டன்ட் 22 - 30, கன்சல்டன்ட் 22 - 40, சீனியர் கன்சல்டன்ட் 22 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. தேவைப்பட்டால் ஆன்லைன் தேர்வு - குழு விவாதம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150

கடைசிநாள்: 24.5.2024

விவரங்களுக்கு: ippbonline.com

Tags

Next Story