தமிழ் நாடு அரசு - 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா ...ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு...

தமிழ் நாடு அரசு - 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா ...ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு...

ஆம்புலன்ஸ்

தமிழக அரசின் கால்நடை ஆம்புலன்சில் மருத்துவ சேவையாளர் மற்றும் ஓட்டுனராக பணிபுரிய ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது.

தமிழக அரசின் சார்பில் 1962 என்ற கட்டணம் இல்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை இ எம் ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் , (EMRI Green Health Services)நிறுவனம் நடத்தி வருகிறது .

இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .

மருத்துவ சேவையாளர் பணிக்கு உண்டான தகுதிகள் என்னென்ன இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவையாளருக்கான தகுதிகள் :-

மருத்துவ சேவையாளருக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பயிற்சி வகுப்பையும் நிறைவு செய்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியமாக 15,725 ரூபாய் வழங்கப்பட உள்ளது .

ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் :-

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருக்க வேண்டும். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும் . இலகு ரக ஓட்டுநர் உரிமம் பேஜ் உரிமம் வைத்திருப்பதுடன் , வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும் .

இவர்களுக்கு ஊதியமாக 15, 820 ரூபாய் வழங்கப்பட உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதி பற்றிய முழு விவரங்களை பெற்றுக் கொள்ள 044- 28888060, 91500 84170, 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story