TCS வேலைவாய்ப்பு.. ஐடி வேலை தான் வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!

TCS வேலைவாய்ப்பு.. ஐடி வேலை தான் வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!

TCS வேலைவாய்ப்பு

சென்னையில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிசிஎஸ் எம்பிஏ ஆஃப் கேம்பஸ் என்ற பெயரில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வி தகுதி :

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ (MBA), எம்எம்எஸ் (MMS), பிஜிடிபிஏ (PGDBA), பிஜிடிஎம் (PGDM) உள்ளிட்ட படிப்புகளில் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனரல் மேனேஜ்மென்ட், பிசினஸ் அனலிடிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

2023ல் படிப்பை முடித்தவர்களும், இந்த ஆண்டு படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்கக்கூடாது.

வயது வரம்பு :

விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு பணியில் முன்அனுபவம் கொண்டவர்கள் என்றால் 2 ஆண்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

விண்ணப்பம் விவரம் :

இந்த பணிக்கு மே மாதம் 10ம் தேதிக்குள் டிசிஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். TCS Next Step Portal-ல் சென்று முதலில் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் நேரடியாக IT Category என்பதை கிளிக் செய்து CT/DT ரெப்ரன்ஸ் நம்பரை பதிவிட்டு விண்ணப்பம் செய்யலாம். புதியவர்கள் என்றால் முதலில் TCS Next Step Portal-ல் முதலில் ரிஜிஸ்ட்டர் செய்து மேற்கூறிய முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது Select Your Mode of Test என்பதில் In Center என்பதை கிளிக் செய்து விரும்பும் தேர்வு மையத்தை செலக்ட் செய்யவும். விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு என்பது ஜுன் மாதம் 17 ம் தேதி நடைபெறும். தேர்வு என்பது 3 வகைகளில் நடக்கும். Verbal Ability, Numerical Ability, Business Aptitude என்பதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.

இந்த பணி தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. யாராவது வேலை தொடர்பாக போன் செய்து பணம் செலுத்த கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் மற்றும் பணியமர்த்தப்படும் இடங்கள் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ilp.support@tcs.com என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story