ஐடி நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? அப்போ ZOHO-வில் சாப்ட்வேர் டெவலப்பர் வேலை !! மிஸ் பண்ணாதிங்க ...
ZOHO-வில் சாப்ட்வேர் டெவலப்பர் வேலை
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து பல வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின்றன.
ஜோஹோ நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் 2024ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ, டிகிரி, என்ஜினீயரிங் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சி, சி++ தெரிந்திருந்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும். சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் புதிய சாப்ட்வேர் ப்ரோகிஸாமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும். மேலும் பிழையின்றி Code எழுத வேண்டும். சாப்ட்வேர் ப்ரோகிராமில் ஏற்படும் Debug, Troubleshoot தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்பதில் ஆர்வம் ஆர்வமாக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
விண்ணப்பம் செய்வோரில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு call letter அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு 5 பிரிவுகளில் இன்டர்வியூ என்பது இருக்கலாம். அதாவது ரிட்டன் டெஸ்ட் (Aptitude), Basic Programming, Advance Programming, டெக்னிக்கல் இன்டர்வியூ, எச்ஆர் இன்டர்வியூ உள்ளிட்ட 5 ரவுண்டுகளாக இருக்கலாம்.
ஜோஹோவை பொறுத்தமட்டில் ஒருமுறை நேர்க்காணலில் பங்கேற்போர் அடுத்து உடனடியாக இன்னொரு நேர்க்காணலில் பங்கேற்க முடியாது. 6 மாத இடைவெளி விட்டே பங்கேற்க வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் இன்டர்வியூ சென்றவர்கள் அதுபற்றி விபரத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும். ஒருவேளை அந்த தகவலை மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.