24 வருட நட்பு அதே நட்புடன் பயணிப்போம் சைந்தவி !!!

24 வருட நட்பு அதே நட்புடன் பயணிப்போம் சைந்தவி !!!

சைந்தவி

ஜி.வி பிரகாஷ் முதன்முதலாக வெயில் என்ற படத்தின் இசை அமைத்த தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார். இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா ,சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில் ,செல்ஃபி அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தனர்.

ஜி.வி பிரகாஷ் ,சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்து நல்ல நண்பர்கள் இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதி திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13ம் தேதி யூட்யூப் வீடியோக்களில் பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது நான் ஜிவி பிரகாஷ் குமாரும் பள்ளி பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு அதே நட்புடன் பயணிப்போம் என்ற சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story