சூரி களமிறங்கிய கருடன் திரைப்படத்தின் தரமான 3- நாள் வசூல் வேட்டை !!

சூரி களமிறங்கிய கருடன் திரைப்படத்தின் தரமான 3- நாள் வசூல் வேட்டை !!

 கருடன் 

நடிகர் சூரி இரண்டாவது முறையாக ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர் சூரி சொக்கன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது.

அதை பராமரித்து வருகிறது வடிவுக்கரசியின் குடும்பம். அந்தக் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்த்த உன்னி முகுந்தனுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார் சூரி.

உன்னி முகுந்தனுக்கு பண கஷ்டம் வர, இவர் ஒரு தவறை செய்துவிடுகிறார். இது குத்து, கொலை வரை சென்று சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களின் நட்பில் விரிசலாக மாறிவிடுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கோவில் நிலத்தை அடைய திட்டம் போடுகிறார் அமைச்சர்.

அமைச்சருக்கு கோவிலின் பட்டா கிடைத்ததா? நண்பர்கள் சேர்ந்தார்களா? சூரி யார் பக்கம் நின்றார் என்பதுதான்? கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை. இப்படத்தில் இடைவெளைக்கு பிறகு விறுவிறுப்பு கூட்டி சூரியை மாஸ் ஆக்சன் தியேட்டரையே அலறவிட்டுள்ளார்.

கருடன் படத்தின் மூன்றாம் வசூல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் முதல் நாளில், ரூ. 3.5 கோடிகளை வசூலித்த நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.4.35 கோடியும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 6.10 கோடியை வசூலித்துள்ளது.

இதுவரை மொத்தம் ரூ.14.45 கோடிகளை இந்தியா முழுவதும் கருடன் திரைப்படம் வசூலித்துள்ளதாகவும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story