நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து - திருமணம் பதிவு ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு !!
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2022 ஜனவரி 17ம் தேதி தாங்கள் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். ரசிகர்களுக்கு இந்த தகவல் ஷாக் கொடுத்தது.
அதை தொடர்ந்து சில காலம் அவர்கள் சட்டப்படி விவாகரத்து வழக்கை பதிவு செய்யாமல் இருந்ததால் அவர்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பிருக்கிறதா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்து அதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ரகசியமாகவே நடந்தது.
இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பில் நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அதனால் அவர்கள் 2004 நவம்பர் 18ம் தேதி பதிவு செய்திருந்த திருமணம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.