சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் - நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி !!

சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் - நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி !!

நடிகர் கார்த்தி

2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி இயக்குனர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தி உடன் ராசிக் கண்ணா, லைலா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் நேற்று காலை இந்த படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

அப்பொழுது எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story