நடிகை சன்னி லியோனின் டிஜே நிகழ்ச்சி ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம் !!
சன்னி லியோன்
ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள ஒரு மதுபான பப் வார இறுதி கொண்டாட்டங்களின் அடிப்படையில் நடிகை சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர்.
ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை வாங்கினர். ஆனால், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர்.
மனுவை போலீசார் மறுப்பு தெரிவித்தாலும், பிரச்சனை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்து சன்னி லியோனை ஐதராபாத் வரவழைத்தனர்.
டிக்கெட் வாங்கியவர்களும் அங்கு நிகழ்ச்சியில் குவிந்தனர் ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்டதை வீடியோ செய்தி மூலம் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.