கூட்டணியாக இசையமைக்க போகிறார் அனிருத் !!

கூட்டணியாக இசையமைக்க போகிறார் அனிருத் !!

அனிருத்

தமிழ் திரையுலகில் இளம் மற்றும் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜினிகாந்த் இயக்கத்தில் மூன்று திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். அனிருத் கிட்டதட்ட 90 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் நடித்த ஜாவான் திரைப்படத்திற்கு இசையமைத்து இந்தி திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

சங்கர் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது. வேட்டையன், தேவாரா, மேஜிக், விடாமுயற்சி, எல்ஐசி, இந்தியன் 3 என்ற அடுத்தடுத்த லைன் அப்ஸ் வந்துள்ளார்.

இந்நிலையில் அனிருத் அவரது எக்ஸ்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் சவுத் இந்தியாவை கலக்குற மாதிரி ஒரு லோடிங் நாளைக்கு என்று பதிவிட்டுள்ளார். யாருடன் இணைந்து இசையமைக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story