விபத்தில் கை எலும்பு முறிவு - அறுவை சிகிச்சைக்கு தயாராகும் ஐஸ்வர்யாராய் !!!

விபத்தில் கை எலும்பு முறிவு - அறுவை சிகிச்சைக்கு தயாராகும் ஐஸ்வர்யாராய் !!!

 ஐஸ்வர்யாராய்

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன், பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு குணமாக வேண்டும் என பதிவுகள் வெளியிட்டனர். ஐஸ்வர்யாராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனே வித்தியாசமான ஆடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக ஐஸ்வர்யா ராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Next Story