எலிமினேட் ஆன அர்னாவ் - உள்ளே இருக்கும் ஆண் போட்டியாளர்களை கடுமையாக பேசியதால் விஜய் சேதுபதி அட்வைஸ் !!
அர்னாவ்
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து நேற்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் விவாதம் ஏற்பட்டு பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் எலிமினேட் வந்த அர்னாவ் விஜய் சேதுபதி உடன் பேசுகையில் மோசமான ஒரு செயலை செய்தார்.
பிக் பாஸ் மேடையில் நின்று வீட்டில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது அவர் ஆண்களை பற்றி தரக்குறைவாக பேசினார்.
அர்னாவ் பேசியது :
'டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிடீங்க' என அவர் கடுமையாக பேச, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.
'இது அநாகரீக பேச்சு. உங்க வன்மத்தை காட்டதிங்க. இப்படி எல்லாம் பேச கூடாது' என சொல்லி விஜய் சேதுபதி அவரிடம் அட்வைஸ் சொன்னார்.
"உங்க எலிமினேஷனுக்கு உள்ளே இருக்க ஆண்கள் டீம் காரணம் இல்லை என்றும் . உங்களை நாமினேட் செய்தது பெண்கள் டீம். ஓட்டு போட்டது வெளியில் இருக்கும் மக்கள். அதனால் நீங்கள் வெளியில் வர ஆண்கள் டீம் எந்த விதத்திலும் காரணம் இல்லை" என சொல்லி விஜய் சேதுபதி அவருக்கு விளக்கம் அளித்தார்.